தொடரும் கடும் வெப்ப நிலை – பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படலாம் என வைத்தியர் சன்ன டி சில்வா எச்சரிக்கை!

Wednesday, March 13th, 2024

நாட்டில்  நிலவும் கடும் வெப்ப நிலை காரணமாக பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படலாம் என வைத்தியர் சன்ன டி சில்வா எச்சரித்துள்ளார்.

இந்த மோசமான நிலைமை வெப்ப அதிர்ச்சி, வெப்ப பக்கவாதம் அல்லது துரதிர்ஷ்டவசமாக மரணத்துக்கு வழிவகுக்கும்.

எனவே, பிள்ளைகளை வெளி நடவடிக்கைகளுக்கு அழைத்துச் செல்வதாயின் காலை வேளையில் அதனை மேற்கொள்ளுமாறு வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலைகளில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அதனால், பிள்ளைகள் அதிகமாக வெளியில் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் சுற்றுச்சூழலின் வெப்பம் அதிகரிப்பதால் அவர்களுக்கு சோர்வு அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தம் - தேசிய ஔடத ஒழுங்குபடுத்தும் ஆணையகம்!
தடையின்றி மின்சாரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் விரைவில் மின் கட்டணத்தைச் செலுத்துங்கள் - இலங்கை ம...
உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கை அகற்றப்பட்ட சிறுமியி...