தொடருந்துகளில் யாசகம் பெறுவோரைக் கைது செய்யும் நடைமுறை அமுலில்!

தொடருந்துகளில் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் யாசகம் பெறுவோரைக் கைது செய்யும் நடைமுறையை இன்று(21) முதல் முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிவில் உடையில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவிக்கின்றார்.
தொடருந்து திணைக்களத்தின் சட்டத்தின் பிரகாரம், தொடருந்துகளில் யாசகம் பெறுவதற்கும் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், சிலர் விதிமுறைகளை மீறி தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.
Related posts:
குண்டு வெடிப்பு சம்பவங்கள் - 21 பேர் கைது!
நீதிமன்ற நடவடிக்கைகள் குறைப்பு !
சிறியளவிலான நெற்செய்கையாளர்கள் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடிசெய்ய தீர்மானம்!
|
|