தேவையான எரிபொருள் இறக்குமதிக்கு ஏற்பாடு – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Monday, April 11th, 2022

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த மாதத்திற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்காக, 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாதத்திற்காக இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் டீசலும் ஒரு லட்சத்து பத்தாயிரம் மெற்றிக் தொன் பெற்றோலும் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

எரிபொருளுடனான கப்பல்கள் பல அடுத்த வாரம் நாட்டிற்கு வரவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

சிகரெட்டினி விலை 5 ரூபாவால் அதிகரிப்பு – அடுத்த வருடம்முதல் 8 பில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்த்த...
எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை சர்வதேச நாணய நிதிய அறிக்கை மீதான விவாதம் நாடாள...
சென்னை - யாழ்ப்பாணம் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்கப்படும் - இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ர...