தேர்தல் வெற்றிக்காக கொள்கைகளை மாற்றும் கேவலமான அரசியலை எப்போதும் நாம் மேற்கொண்டது கிடையாது – ஈ.பி.டி.பியின் தவிசாளர் மித்திரன் தெரிவிப்பு!

Saturday, May 23rd, 2020

தேர்தல் வெற்றிக்காக கொள்கைகளை பறக்க விட்டுவிட்டு இனவாதத்தையும் மத வாதத்தையும் தூண்டி முரண்பாடுகளை ஏற்படுத்தும் கேவலமான அரசியலை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி  எப்போதும் மேற்கொண்டது கிடையாது என கட்சியின் தவிசாளர் மித்திரன் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் – நாம் ஒரே தலைமையின் கீழ் மாற்றமில்ல கொள்கை வழியில் நின்று மக்களுக்காக நீண்டகாலமாக உழைத்துவருகின்றோம். அதுமட்டுமல்லாது மாற்றுக் கொள்கை மாற்று வழிமுறை ஊடாக மக்களின் அரசியல் உரிமை உள்ளிட்ட அபிலாசைகளை நிறைவேற்ற முயன்று கொண்டிருப்பதாகவும் தவிசாளர் மித்திரன் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: