தேர்தல் பிற்போடப்பட்ட பிரதேச சபைகளுக்கு புதிய வேட்பு மனு!

Monday, October 23rd, 2017

முல்லைத்தீவில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் புதிய வேட்பு மனு கோரப்பட்டு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவின் கரைத்துறை பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் மிக நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய தேர்தல் திருத்தச்சட்டம் மூலமாக உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதாயின் அதற்கு முன்னதாக வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறை பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற வேண்டும்.எனினும் குறித்த வேட்புமனுவில் கைச்சாத்திட்டுள்ளவர்களில் பலர் தற்போது கட்சி மாறியுள்ளார்கள்.

35 வயதுக்குக்கீழ் வேட்பாளரா்களாக உள்வாங்கப்பட்டவர்கள் அந்த வயதெல்லையைக் கடந்து விட்டார்கள்.இவ்வாறான சிக்கல்களால் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறை பற்று பிரதேச சபைகளுக்கான முன்னைய வேட்பு மனுக்களை ரத்துச் செய்யவும் புதிய திருத்தச் சட்டத்தின் கீழ் மீண்டும் வேட்புமனுக்களை கோரவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதற்கான நாடாளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான பிரேரணை கடந்த வௌ்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts: