தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்திற்காக நாளை – கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

Monday, April 10th, 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (11) கூடவுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் கோரியதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்று பிரதமருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: