தேர்தல் சட்ட விதி மீறல் குற்றச்சாட்டில் பதினேழு வேட்பாளர்கள் கைது – பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான குற்றங்கள் மற்றும் தேர்தல் சட்ட விதிமீறல்கள் குறித்து பதினேழு வேட்பாளர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களின் நான்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலியா சேனரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “குற்றங்கள் தொடர்பாக இரண்டு முறைப்பாடுகள் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியதாக 8 முறைப்பாடுகள் நேற்றும் கிடைக்கப்பெற்றன.
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 357 முறைப்பாடுகளில் மொத்தம் 440பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நேற்றைய நிலவரப்படி 123 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு அவர்களின் பாதுகாப்பில் உள்ளன” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கடன் தேவையில்லை : முதலீடுகளே தேவை- அமைச்சர் ரவி கருணாநாயக்க
அதிகரிப்பு போதாது - அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம்!
வரிச் சலுகைக்கு அமைச்சரவை அனுமதி!
|
|