பாடசாலைகளுக்கு முகாமையாளரை நியமிக்கும் தீர்மானத்தை ஏற்க முடியாது  – இலங்கை ஆசிரியர் சங்கம் !

Wednesday, March 14th, 2018

மெகா பாடசாலை நடைமுறையை உறுதிப்படுத்தவே கல்வியமைச்சர் 1000 இற்கும் மேற்கபட்ட மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளுக்கு முகாமையாளரை நியமிக்க முற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது

அண்மையில் கல்வியமைச்சர் 1000 இற்கு மேல் மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைக்கு முகாமையாளர்கள் நியமிக்கவுள்ளதாக கூறியள்;ளார் . அவரது யோசனை நாம் வன்மையாக கண்டிக்கின்றொம் .இவ்வாறான நியமனங்ளை மேற்கொள்வது தேவையற்ற ஒன்று . இது பல்கலைக் கழகத்திற்கே பொருத்தமானது .

ஒரு பாடசாலையில் அதிபருக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தெரிந்திருக்க வேண்டும்  அது போல் மாணவர்களுக்கு அதிபர் ஆசிரியரை அறிந்திருக்க வேண்டும் இதுவே 1943 சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கராவின் சமனான பாடசாலை நடைமுறையாகும் . அதாவது எல்லா பாடசாலைகளையும் சமனாhன வகையில் ஏற்படுத்த வேண்டுமென்பதை மாற்றி பெரிய பாடசாலை நடைமுறையை உறுதிப்படுத்துவதே முகாமையாளரை நியமிக்கும் திர்மானமாகும்.

நாட்டில் 1000 இற்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகள் 758 உம் 2000  இற்கம் மேற்பட்ட மாணவர்களை கொண்ட 192 உம் உள்ளன மொத்தமாக நாட்டில் 10,162 பாடசாலைகள் உள்ள நிலையில் இவற்றை சமமாக அபிவிருத்தி செய்வதை விட்டுவிட்டு மெகா பாடசாலை நடைமுறையை முன்னெடுப்பதை நாம் கண்டிக்கிறோம்  என்றார்

Related posts: