தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச பணியாளர்களின் விவரங்கள் கோரல்!

Sunday, September 17th, 2017

தேர்தலில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் பெயர் விவரங்களை அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மாவட்டச் செயலகங்கள் திணைக்களங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் வடக்கில் உள்ள மாவட்டச் செயலகங்கள் மற்றும் அரசதிணைக்களங்களுக்கு தேர்தல்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் விவரங்களை உடன் அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கோரியுள்ளார். கிழக்கு மாகாணசபை உட்பட மூன்று மாகாணசபைகளின் ஆயுள் காலம் விரைவில் முடிவடையவுள்ளது. அதே நேரம் உள்ளூராட்சி சபைகளின் எல்லை மீள் நிர்ணய விடயம் முடிவுறவில்லை. விரைவில் நாடு பூராகவும் உள்ளூராட்சி சபைத்தேர்தல்கள் ஜனவரிமாதம் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே மேற்படி அறிவித்தல் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் உள்ளூராட்சி சபைத் தேர்தலானது இந்த ஆண்டிலிருந்து வட்டாரம் மற்றும் விகிதாசார அடிப்படையிலும் கலப்புமுறையில் இடம்பெறவுள்ளது. அதற்கேற்ப புதிய வாக்களிப்பு நிலையங்களை தேர்வு செய்யும் பணியில் மாவட்டச் செயலகங்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: