தேர்தல் ஒத்திவைப்பிற்கு எதிராக நாடாளுமன்றில் இரண்டு நாள் விவாதம்!

Thursday, March 2nd, 2023

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இரண்டு நாள் விவாதத்தினை கோரியிருந்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமை தொடர்பில் நாட்டில் பலத்த எதிர்ப்பு நிலவி வருவதால், இது தொடர்பில் பரந்துபட்ட விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: