தேர்தல்கள் இடாப்பில் பெயர் இல்லையா – டிசெம்பர் 5ஆம் திகதிக்கு முன் அறிவிக்கவும்!
Saturday, December 2nd, 2017நட்பு ஆண்டுக்கான தேர்தல்கள் இடாப்பில் தமது பெயர்கள் இடம்பெறாதவர்கள் அது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கும்படி தேர்தல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
எதிர்வரும் உள்@ராட்சித் தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர்களது பெயர்கள் அடங்கிய இடாப்புக்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன.
திருத்தம் செய்யப்பட்ட பெயர்ப் பட்டியல்களே இடாப்பில் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, அதில் தமது பெயர்கள் விடுபட்டிருப்பின் அது குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Related posts:
புதிய அரசியல் அமைப்பு தயாரிப்பு தொடர்பில் கருத்தரங்கு!
இன்று கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு !
குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய 20 விசேட பொலிஸ் குழுக்கள் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்,...
|
|