தேசிய பாடசாலை ஆசிரிய பரம்பலை சீராக்கும் பணி மாகாணக் கல்விப் பணிப்பாளர்களிடம் ஒப்படைப்பு – கல்வி அமைச்சு !
Thursday, March 2nd, 2017நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பரம்பலை சீராக்கும் பணிகள் அந்தந்த மாகாணக்கல்விப் பணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுற்றறிக்கை மூலம் சகல வலய மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளது.
தேசிய பாடசாலைகளில் 10 வருடமும், அதற்கு மேலும் கடமையாற்றும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்தல், மேலதிகமாக கடமையாற்றும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்தல் உள்ளிட்ட ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான விடயங்கள் மாகாணக்கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தேசிய பாடசாலைகளில் தேவைக்கு மேலதிகமாக ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய முடியாத நிலை கடந்த காலங்களில் மாகாணக்கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக மாகாண பாடசாலைகள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கின.
பெரும்பாலான தேசிய பாடசாலைகளில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணிக்கு மேலதிகமாக ஆசிரியர்கள் காணப்படுகின்றனர் பல ஆசிரியர்களுக்க நேர சூசியும் இல்லாது கடமையாற்றுகின்றனர் உரிய பாடத்துறைக்கென வகுப்புகள் இல்லாத போதிலும் அங்கு கடமையாற்றுகின்றனர்.
இந்நிலமைகளை கருத்திற்கொண்டு தேசிய பாடசாலை ஆசிரியர்களை அந்தந்த மாவட்டங்களுக்குள்ளும் மாகாணங்களுக்குள்ளும் இடமாற்றம் செய்யும் அதிகாரம் தற்போது மாகாணக்கல்விப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது தேசிய பாடசாலைகளில் 10 வருடமும் அதற்கு மேலும் கடமையாற்றும் ஆசிரியர்கள் விபரம் மற்றும் ஆளணிக்கு மேலதிகமாக கடமையாற்றும் ஆசிரியர்கள் விபரம் என்பவற்றை கல்வி அமைச்சு சகல தேசிய பாடசாலை அதிபர்களிடம் கோரியுள்ளது.
Related posts:
|
|