தேசிய அடையாள அட்டை வழங்கலுக்கான சுற்றறிக்கை இவ்வாரம்!

Tuesday, January 23rd, 2018

சாதாரண தர பரீட்சைக்கு இம்முறை தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்குரிய சுற்றறிக்கை இவ் வாரத்திற்குள் அனைத்துபாடசாலைகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று ஆட்பதிவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சுற்றறிக்கையில் உள்ள வழிகாட்டல்களின் பிரகாரம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும்என ஆட்பதிவுத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானா குணதிலக்க தெரிவித்துள்ளார்.

Related posts: