தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர்களுக்கான அறிவிப்பு!

Monday, November 20th, 2017

 

இதுவரையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளாத, இந்தமுறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு, விசேட சேவையை வழங்க ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 25ம் திகதி, பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தில் இந்த விசேட சேவை வழங்கல் இடம்பெறும்.

இதன்போது மாணவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டைகளை உடனடியாக பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் ஏற்கனவே அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொண்டவர்கள், அவற்றில் பிழைகள் இருப்பின் திருத்திக் கொள்ளவும் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: