தேசிய அடையாள அட்டைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு – நவம்பர் முதலாம் திகதிமுதல் அமுலாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரது கையொப்பத்துடன் வர்த்தமானி வெளியீடு!
Friday, October 14th, 2022தேசிய அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிமுதல் அமுலாகும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா என்ற கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருத்தம் செய்து மீண்டும் பெற்றுக் கொள்ளப்படும் தேசிய அடையாள அட்டைக்காக இதுவரை அறவிடப்பட்ட 250 ரூபா என்ற கட்டணம் 500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசின் கையொப்பத்துடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயணச்சீட்டு வழங்காத நடத்துனர்களுக்கு அபராதம்!
மாணவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கான விசேட திட்டம்!
புதர்மண்டிக் காணப்படும் காணிகளை தூய்மையாக்க நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபையின்...
|
|