தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மற்றொரு சிங்கத்துக்கும் கொவிட்!

Thursday, June 24th, 2021

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கொவிட் தொற்றுறுதியான ‘தோர்’ என்ற ஆண் சிங்கம் வசித்துவந்த பகுதியில் இருந்த ‘ஷீனா’ என்ற பெண் சிங்கத்துக்கும் கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

ராகம மருத்துவ பீடத்திற்கு  அனுப்பப்பட்ட 12 வயதான குறித்த பெண் சிங்கத்தின் மாதிரிகள் கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன

அதன்போது, குறித்த சிங்கத்துக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரச கால்நடை மருத்துவ சங்கத்தின் செயலாளர் நுவன் ஹேவாகமகே தெரிவித்துள்ளார்..

அத்துடன் தொற்றுதியான சிங்கத்திற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்..

இதேவேளை, முன்னதாக கொவிட் தொற்றுக்குள்ளான தோர் தற்போது குணமடைந்து வருவதாக மிருகக்காட்சி சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

யாழ்ப்பாணம் பிரதேசத்திற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு  ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவ...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலரை நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவையின் பெரும்பான்மை...
வடக்கில் தொடர்ந்து சில தினங்களில் மிதமான மழை கிடைக்க வாய்ப்பு - விரிவுரையாளர் பிரதீபராஜா எதிர்வுகூற...