தெவரப்பெருமவுக்கு விளக்கமறியல்!

Wednesday, July 6th, 2016

கைதுசெய்யப்பட்ட பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவை எதிர்வரும் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்துகம பாடசாலை ஒன்றில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை அனுமதிக்கவேண்டும் என்று கோரி தெவரப்பெரும உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்ட நிலையில் கடந்த வாரம் பாடசாலைக்குள்ளும் அனுமதியின்றி பிரவேசித்தார்.

இதன்பின்னர் தற்கொலை செய்ய முயன்றநிலையில் காப்பாற்றப்பட்டு கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்தார்.

இந்நிலையில் அவருடன் பாடசாலைக்குள் பிரவேசித்த 9 மாணவர்களின் பெற்றோர்கள் இன்றுகைதுசெய்யப்பட்டு, 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதனை கேள்வியுற்றதும் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பாலித தெவரப்பெரும சரணடைய சென்றார். எனினும் அவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

 

 

Related posts: