தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Wednesday, December 16th, 2020

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகள் இருவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் தரம் ஏழு மற்றும் தரம் ஒன்பது ஆகிய வகுப்புகளில் கல்விபயிலும் சகோதரிகள் இருவருக்கே தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாணவிகள் இருவரும், மருதனார்மடம் கொரோனா கொத்தணியுடன் தொடர்பயுடைய ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களுள் இரண்டாவது நாள் இனங்காணப்பட்ட கீரிமலை, கூவில் பகுதியைச் சேர்ந்த தொற்றாளரின் மகள்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரு மாணவிகளும் கடந்தவாரம் பாடசாலைக்குச் சென்று வந்துள்ளதுடன், ஒன்பதாம் தரத்தில் கல்விகற்கும் மாணவி கடந்த சனிக்கிழமையும் பாடசாலையில் இடம்பெற்ற பரீட்சையில் பங்குபற்றியுள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவிகளின் வகுப்பினைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் கல்விகற்பித்த ஆசிரியர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதரத்துறையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: