தெற்காசியாவின் அதிசயம் முழுமை அடைந்தது!

Monday, July 8th, 2019

தெற்காசியாவில் மிகவும் உயர்ந்த கோபுரமாக கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கோபுரத்தின் நிர்மாண செயற்றிட்டத்தின் இறுதிக்கட்ட மேற்பார்வை நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்ப்பட்டு வருவதாக செயற்திட்ட ஆலோசகர் பேராசிரியர் சமித்த மானவடு தெரிவித்தார்.

2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பமான இந்த செயற்திட்டம் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்பட்டது. இந்த கோபுரத்தின் உயரம் 356 மீற்றர்களாகும்.

இந்த கோபுரத்தின் கீழ்மட்ட 3 மாடிகள் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 8 மாடிகளில் 2 மாடிகள் களியாட்ட நிகழ்வுகளுக்கும் தொலைத்தொடர்பு நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாடியிலும் சுமார் 400 பேரை உள்ளடக்கக் கூடிய இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கோபுரத்தில் 250 வாகனங்களை நிறுத்துவதற்கான தரிப்பிட வசதிகளும் உண்டு.

தொலைத்தொடர்பு நெறிப்படுத்தல் ஆணைக்குழுவின் கீழ் இந்த நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ராஜாங்க அமைச்சின் செயலாளரின் மேற்பார்வையில் இந்த நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரம் தெற்காசியாவின் அதிசயம் என பலராலும் வர்ணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: