உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக, உணவு உற்பத்திக்காக வீட்டுத் தோட்ட உற்பத்தி கிராமங்களை உருவாக்க நடவடிக்கை – அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Monday, June 6th, 2022

தட்டுப்பாடு நிலவும் உணவுப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்காக வீட்டுத் தோட்டச் செய்கையை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக இது நடைமுறைப் படுத்தப்படுமென்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்..

தற்போதைய சந்தர்ப்பத்தில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். கிராம உத்தியோகத்தர்கள், விவசாய அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த வேலைத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் சிலர் செயற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெரும்போக பயிர்ச் செய்கைக்குத் தேவையான உரத்தைக் கொள்வனவு செய்வதற்கு 110 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொதுத்துறை ஊழியர்களுக்காக வீட்டிலிருந்து பணிபுரியும் திட்டத்தை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை ஊழியர்களின் போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இருப்பினும், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: