தென்னிந்திய மீனவர்களோடு தொடர்புகளைப் பேணாதீர்கள் – யாழ்மாவட்ட கடற்றொழிலாளர்களிடம் கட்டளைத் தளபதி கோரிக்கை!

Sunday, April 25th, 2021

இந்திய மீனவர்களுடன் இலங்கை மீனவர்கள் பேணிவரும் தொடர்புகள் காரணமாக வடபகுதியில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவரமடையக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா எச்சரித்துள்ளார்.

இது  தாடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

“யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின் றேன். நீங்கள் தயவு செய்து யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக தென்னிந்திய மீனவர்களோடு தொடர்புகளைப் பேணாதீர்கள்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இவ்வாறு நீங்கள் தொடர்புகளைப் பேணிக்கொள்வதன் மூலம் யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமடையக் கூடிய ஆபத்து நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் இந்தியாவில் தற்பொழுது கொரோனா தொற்று நிலைமை மிகத் தீவிரமடைந்துள்ளது. அந்த வைரஸ் இங்கு பரவினால் தொற்று நிலைமை தீவிரமடையும்.

எனவே இந்த விடயம் தொடர்பில் அவதானமாகச் செயல்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: