துண்டு விழும் தொகையை குறைக்கும் நோக்கில் பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளது – திறைசேரி செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, November 2nd, 2021

நாட்டின் அபிவிருத்தியை வலுப்படுத்தவும், பாதீட்டின் துண்டுவிழும் தொகையை உகந்த அளவில் குறைக்கும் நோக்கிலும் இம்முறை பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளதாகத் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக கேந்திரத்தில் இன்று (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நீர், பெருந்தெருக்கள் மற்றும் நீர்ப்பாசனம் என்பன தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக இம்முறை அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: