தீவக இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பை உருவாக்க வேலணையில் உருவாகுகின்றது தொழில் பேட்டை!

Wednesday, December 4th, 2019

வடபகுதி இளைஞர் மற்றும் யுவதிகளின் தொழில்வாய்ப்புக் கனவுக்கு களம் கொடுக்கும் வகையில் வேலணை பிரதேசத்தில் தொழில் பயிற்சி மையமொன்றை அமைத்து பயிற்சிகளை வழங்க தனியார் நிறுவனமான Building A Future Foundation ( Baff ) தொழில் பயிற்சி நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

குறித்த நிறுவனம் தீவக பகுதியின் சுற்றுலா துறையை மையப்படுத்தியதாக கண்ணாடி இளையிலான ஆடம்பர படகு கட்டுமாணம் என்னும் ஒரு கற்கை நெறியை இதில் உள்வாங்கியுள்ளது.

அத்துடன் இயந்திர பொறியியல் கற்கை நெறி, கண்ணாடியிளை வார்ப்பு, குளாய் பொருத்த்துதல், மின்சார இணைப்பு பயிற்சி நெறி, A/C திருத்தம் உள்ளிட்ட பல தொழில் பயிற்சிகள் இந்த தொழில் பயிற்சி நிறுவனத்தினால் வழங்கப்பட்டு அந்த தொழில் பயிற்சியில் சித்தியடையும் மாணவர்களுக்கு அந்த நிறுவனத்திலேயே நிரந்தர தொழில்வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
பயிற்சிக்காலத்தில் மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவும் உணவும் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

தீவக இளைஞர்களுக்கே இந்த பயிற்சியின்போது முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்த அதிகாரிகள், வேலணை மண்கும்பான் பகுதியில் இத்தொழில் பயிற்சி நிறுவனத்தை அமைப்பதற்காக குறித்த நிறுவனம் சுமார் 4.83 ஏக்கர் நிலப்பரப்பை கொள்வனவு செய்துள்ளதுடன் அதற்கான அனுமதிக்கும் உரிய தரப்பினரிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் இது தொடர்பில் இன்றையதினம் வேலணை பிரதேச சபை தவிசாளரை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: