தீவகத்தில் நெற்செய்கையை பாதுகாப்பதற்கு முட்கம்பிகள் – விவசாயத் திணைக்களம் வழங்கியது!

கட்டாக்காலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையால் தீவகத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நெற்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு முட்கம்பிகள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்தது..
நெற்செய்கையைப் பாதுகாக்கும் பொருட்டு விவசாயத் திணைக்கத்தின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 223 முட்கம்பிச் சுருள்கள் கொள்வனவு செய்யப்பட்டன. புங்குடுதீவு கமநல சேவைகள் நிலையத்தில் தெரிவு செய்யப்பட்ட 55 விவசாயிகளுக்கு தலா 25கிலோ எடையுடைய 171 முட்கம்பிச் சுருள்கள் வழங்கப்பட்டன. ஏனைய முட்கம்பிச் சுருள்கள் தெரிவு அடிப்படையில் விவசாயிகளுக்கு பகிரப்படும் – என்று விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்
Related posts:
வாக்குகளை எண்ணுவதில் புதிய முறை!
இலங்கைச் சிறுவர்கள் தொடர்பில் ஐ.நாவின் அறிக்கை!
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இராஜினாமா!
|
|