தீர்வைக் காணவேண்டுமென்ற நேர்மையான நோக்கத்துடனேயே பேச்சுக்களை அரசு முன்னெடுகின்றின்றது – இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம் – தமிழ் கட்சிகளுடனான பேச்சு குறித்து நீதியமைச்சர் கருத்து!
Tuesday, December 13th, 2022அரசியல் தீர்வைக் காணவேண்டுமென்ற நேர்மையான நோக்கத்துடனேயே இந்த பேச்சுவார்த்தைகளை நாங்கள் முன்னெடுப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சகல அரசியல் கட்சிகளுடனும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே நாங்கள் இன்று (13) பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம்.
மேலும், இனப்பிரச்சினை தீர்வு செயற்பாட்டில் இந்தியாவின் கரிசனையை புறக்கணிக்கவோ அல்லது இந்தியாவின் கரிசனையை குறைத்து மதிப்பிடவோ முடியாது.
இந்த விடயத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றும் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சகல அரசியல்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
பேச்சுவார்த்தையில் சகல அரசியல் கட்சிகளுக்கும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதென நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|