தீர்க்கதரிசன சிந்தனையுடன் திடமாக மக்களுக்காக உழைப்பவர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா – சிவகுரு பாலகிருஷ்ணன்

Monday, May 9th, 2016

தீர்க்கதரிசனமான சிந்தனையும் திடமான மன உறுதிப்பாடும் கொண்டவர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி.மேற்கு நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் (ஜீவன்) தெரிவித்துள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற எழுச்சி மாநாட்டில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சார்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 80களில் எமது கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது அதற்காக கட்சியின் செயலாளர் நாயகம் பட்ட துன்ப, துயரங்களும் கஷ்டங்களும் எண்ணில் அடங்காதவை.

ஒருவேளை உணவுக்காகக்கூட நாம் மிகுந்த இடர்பாடுகளைச் சந்தித்த பொழுதுகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களை தோழர்களுக்கு சம அளவாக பரிமாறி தாம் கொண்ட கொள்கையை முன்னெடுப்பதில் அயராது உழைத்து நின்றவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்றும், இற்றைவரையில் இடர்பாடுகளைச் சந்திக்கின்ற பொழுதிலும் துஞ்சாது மன உறுதியுடன் மக்கள் பணியை முன்னெடுத்து வருகின்றார் என்றும் தெரிவித்தார்.

அந்தவகையில் கட்சியின் ஆரம்பகாலம் தொட்டு இற்றைவரையில் மக்கள் பணிக்காக திடமான மன உறுதியுடன் சதாகாலமும் உழைத்து வருபவர் டக்ளஸ் தேவானந்தா என்றும் சுட்டிக்காட்டினார்.

இதில் மூத்த உறுப்பினர்களான வின்சன், ஸ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்) ஆகியோர் உரையாற்றியதையடுத்து மகேஸ்வரனும் உரையாற்றியிருந்தார்.

இதனிடையே கவிஞர் சிவகுமார் அவையில் கவிதையொன்றினை வாசித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related posts: