திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன பங்கேற்கவில்லை என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டு!

Monday, October 2nd, 2023

கடந்த இரண்டு வாரங்களாக சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலில் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன பங்கேற்கவில்லை என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கான கடன்வசதி தொடர்பான மீளாய்வு கூட்டங்களை கடந்த 2 வாரங்களாக கொழும்பில் நடத்தியிருந்தது.

எனினும், இரண்டாவது தவணைக் கொடுப்பனவுக்கான காலம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதுடன், அரச வருமானத்தை அதிகரிப்பத்தில் அரசாங்கம் அதிக கவனம் எடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில் குறித்த பேச்சுவார்த்தைகளில் இலங்கையின் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன பங்கேற்வில்லையெனவும், இதன்காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன சீனாவில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தமது பயணம் உரிய அறிவிப்புக்களுடன் திட்டமிடப்பட்டதை இதன்போது சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருந்ததாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், திறைசேரி செயலாளர் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த காலப்பகுதியில், காணொளி தொழில்நுட்பம் ஊடாக சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டதாக இராஜாங்க அமைச்சர ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் திட்டம் தொடர்பில் அரசியல் நோக்கங்களுக்காக பல்வேறு தரப்பினர் பொய்யான பிரசாரங்களை வெளியிட்டு வருவதாகவும், குறித்த கலந்துரையாடல்களில் திறைசேரி செயலாளர் பங்கேற்கவில்லை என வெளியான தகவல் அவற்றில் ஒன்றெனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: