திருமலை வைத்தியசாலைகளில் காணப்படும் கட்டில்களின் தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்!

Saturday, May 1st, 2021

திருகோணமலை மாவட்டத்தில் கோரானா நோயாளர்கள் தொகை அதிகரித்துவரும் நிலையை கருத்திற் கொண்டு வைத்தியசாலைகளில் காணப்படும் கட்டில்களின் தொகையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்.கொஸ்தா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் –

”திருகோணமலை மாவட்டத்தில் கோரானா நோயாளர்களுக்கான வைத்திய தேவைகளுக்காக இரண்டு வைத்திய சாலைகளில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது இந் நிலையில் தற்போது அதற்கு மேலதிகமாக கோமரன் கடவளை வைத்தியசாலையும் குறித்த நோய்க்கான சிகிச்சை வழங்கும் நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் எதிர்வரும் 10ஆம் திகதியிலிரந்து குறித்த வைத்தியசாலையானது முழுமையான இயக்கத்துக்கு வரும்.

அதற்கு மேலதிகமாக கந்தளாய் சீனி தொழிற்சாலை மற்றும் மாவட்ட இளைஞர் அபிவிருத்தி திட்டங்களுக்கான கட்டடங்களையும் மேலதிக சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிய 53 தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17, உப்புவெளி 19, மூதூர் 11, தம்பலகாமம் 6, அடங்கலாக திருகோணமலை மாவட்டத்தில் 53 கொரோணா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அதிக தொற்று பரவல் நிலவும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றபடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாகவும் நோய் தோற்றாளர்களது எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் முடக்க நிலை அறிவிக்கப்படக்கூடும்” என அவர் குறிப்பிட்டார்.

00

Related posts: