திருமலையில் 14 வயது சிறுவர்கள் இருவர் பலி!

Sunday, April 18th, 2021

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் உள்ள பரவிபாஞ்சான் குளத்தில் நீராட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முள்ளிப்பொத்தானை பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுவர்களே இவ்வாறு மரணித்தனர். சடலங்கள் தற்போது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Related posts: