திருமண வைபவங்கள் தொடர்பிலான கட்டுப்பாடுகளில் தளர்வு!

Tuesday, July 7th, 2020

திருமண வைபவங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைபவ மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையில் 50 சதவீதமானோர் அல்லது ஆகக்கூடிய வகையில் 300 பேருக்கு (மணமகன் உள்ளிட்ட குழு, மணமகள் உள்ளிட்ட குழு, இசைக்குழு மற்றும் ஏனைய கலைஞர்கள் அடங்கலாக குறைந்த எண்ணிக்கையில் திருமண வைபவத்தில் கலந்து கொள்ளும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிலேற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியில் மூடப்பட்ட திருமணமண்டபங்கள் சுகாதார முறைப்படி மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது மேலும் அந்தக் கட்டுப்பாடுகளில் தளர்வளிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தோழர் லிங்கேஸ் அவர்களின் புகளுடலுக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் கட்சி கொடி போர்த்தி இறுதி அஞ்சலி ம...
கொவிட் - 19 தடுப்பு மருந்தேற்றல் திட்டம் - இரண்டாவது தடுப்பூசி வழங்கல் தொடர்பில் பணிப்பாளரின் அறிவிப...
வெளிநாட்டிலிருக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான தேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கையொன்றை தயாரி...