திங்கள்முதல் மீண்டும் மின் துண்டிப்பு – இன்றும், நாளையும் இரவு வேளைகளில் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்படமாட்டாது என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, February 26th, 2022

தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மீண்டும் மின்சார துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்றும், நாளையும் இரவு வேளைகளில் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்படமாட்டாது என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பகல்வேளையில் ஏ.பி மற்றும் சி வலயங்களில் 3 மணித்தியாலயங்களும், ஏனைய வலயங்களில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 38,400 மெற்றிக் டன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்று இன்றையதினம் நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான உலை எண்ணெய் தாங்கிய கப்பலை அடுத்த வாரம் நாட்டிற்கு வரவழைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: