தாமதிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய!
Tuesday, June 2nd, 2020ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தலை மேலும் தாமதிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகள் எவற்றிலும் தேர்தல் ஆணைக்குழு ஈடுபடவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் செயற்படுவது மிக முக்கியமான விடயம் என நாங்கள் உறுதியாக கருதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படும் நிலைமை காரணமாக முன்னர் தீர்மானித்தபடி ஜூன் 20 ம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்பதை தேர்தல் ஆணைக்கு தனது சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட தடைகள் எதுவும் இல்லாவிட்டால் நீதிமன்றத்தின் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 60 அல்லது 70 நாட்களிற்குள் எங்களால் தேர்தலை நடத்த முடியும் என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தலை எப்படி நடத்தவேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்கள் சுகாதார அதிகாரிகளிடமிருந்து கிடைத்துள்ளன,நாங்கள் புதிய இயல்பு நிலைக்கு ஏற்ப அல்லது ஓரளவிற்கு இயல்புநிலைக்கு ஏற்ப வாழப்பழகிக்கொள்ளவேண்டும் இதனடிப்படையிலேயே நாங்கள் வாக்குசாவடிகளிற்கு சுகாதார உத்தியோகத்தர்களை அனுமதிக்கவேண்டும் எனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|