வாசிப்பு ஆற்றல் மிகுந்த பிள்ளைகளுக்கு வெளிநாட்டுப் பயண வாய்ப்பு !

Friday, December 8th, 2017

வாசிப்பு ஆற்றல் மிக்க பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் வெளிநாட்டுப் பயண வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்களின் வாசிப்பு ஆற்றலை  மேம்படுத்தி, சர்வதேச மட்டத்தில் கூடுதல் அறிவுடையவர்களாக திகழ வாய்ப்பளிப்பது அரசாங்கத்தின்நோக்கம் என அவர்  தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள  மூவாயிரத்து 312 பாடசாலைகளுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான 70 கோடி ரூபா நிதியுதவியை பகிர்ந்தளித்துபாடசாலைகளுக்கு பரிந்துரைக்கப்படும் நூல்களின் பெயர்கள் அடங்கிய பாடசாலை நூலகப் பட்டியலை வெளியிடும் நிகழ்வு  அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், சகல மாகாணங்களையும் சேர்ந்த தமிழ் பாடசாலைகளுக்கு பெருமளவு நிதிஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 809 தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு 22 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts: