தாமதங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை – நீதி அமைச்சர்!

Monday, September 4th, 2017

நீதிமன்றங்களில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளின் தாமதங்களை தவிர்க்க அவசியமாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் வெளிநாட்டு பணி விவகார அமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் தலத்தா அத்துகோரல இவ்வாறு குறிப்பிட்டார். நீதிமன்றத்தின் தனித்தன்மையை பாதுகாக்கும் முகமாக அவசியமான நடவடிக்கைகளை தற்போதைய அரசு முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: