தாதியர்களின் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Thursday, February 17th, 2022

தாதியர்களின் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்திற்கொண்டு, முழு அரச சேவையும் பாதிக்காதவாறு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 09 நாட்களுக்கு முன்னர் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

எனினும் அமைச்சரவையில் முன்மொழியப்பட்ட யோசனையை சுகாதார அமைச்சர் சமர்ப்பித்ததை அடுத்து பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: