தாஜூதீனின் உடற்பாகங்களை தேடி திடீர் சோதனை : 26 மனித உடற்பாகங்கள் மீட்பு!

Monday, October 3rd, 2016

வசீம் தாஜூதீனின் முதலாவது பிரேத பரிசோதனையின் போது காணாமல் போன உடல் பாகங்கள் தொடர்பில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனை செய்த குற்றப் புலனாய்வு பிரிவினர் 26 மனித உடற்பாகங்களை கைப்பற்றியுள்ளனர்.

றக்பி வீரர், வசீம் தாஜூதீனின் முதலாவது பிரேத பரிசோதனையின் போது காணாமல் போன உடல் பாகங்கள் தொடர்பில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை திடீர் சோதனை செய்த குற்றப் புலனாய்வு பிரிவினரும் வைத்திய நிபுணர்களும் 26 மனித உடற்பாகங்களை கைப்பற்றியுள்ளனர்.

D000000000000000ddd

Related posts: