தற்போது பதிவாகும் கொரோனா தொற்றுக்கு 95.8 வீதம் டெல்டா திரிபே காரணம் – ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வில் ஆய்வில் உறுதி!

Friday, September 10th, 2021

நாட்டில் தற்போது பதிவாகும் புதிய கொவிட் தொற்றுக்கு, 95.8 % டெல்டா கொவிட் திரிபே காரணம் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இம்மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டின் வெவ்வேறு மாகாணங்களிலிருந்து பெறப்பட்ட வெவ்வேறு வகையான கொவிட் திரிபு பீசிஆர் மாதிரிகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் பிரிவின் ஆய்வாளர்களான பேராசிரியர் நீலிகா மளவிகே, வைத்தியர் சந்திம ஜீவந்தர உள்ளிட்ட குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.

அதற்கமைய, மேல் மாகாணத்தில் பதிவாகும் புதிய தொற்றுக்கு 100% டெல்டா திரிபே காரணமாகிறது என ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய, மாகாணங்களில் பதிவாகும் புதிய கொவிட் தொற்றுகளுக்கு 84 முதல் 100 % வரை டெல்டா திரிபே காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: