தரிசு வயல்களில் தெங்கு செய்கையை முன்னெடுக்க அனுமதி!

Thursday, July 15th, 2021

தரிசு வயல்களில் தெங்கு செய்கையை ஆரம்பிப்பதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில், B மற்றும் C தரங்களிலுள்ள தரிசு வயல்களில் தெங்கு செய்கையை ஆரம்பிக்கவுள்ளதாக சபையின் பொதுமுகாமையாளர் மானெல் குலரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்காக ஏக்கரொன்றிற்கு  ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தெங்கு செய்கைக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: