தரம் I அதிபராக பதவி உயர்த்தப்பட்டும் அதற்குரிய கடிதங்கள் கிடைக்கவில்லை!

Wednesday, November 22nd, 2017

இலங்கை அதிபர் சேவையின் புதிய சேவை பிரமாணக் குறிப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு சம்பள மாற்றம் செய்யப்பட்ட போதும் கல்வி அமைச்சு அவர்களுக்கான பதவி உயர்வு கடிதங்களை அனுப்பிவைக்கவில்லை என குற்றம் சுமத்தப்படுகிறது.

இலங்கை அதிபர் சேவைக்கான பழைய சேவை பிரணாமக் குறிப்பிற்கமைய சேவையில் உள்ள இலங்கை அதிபர் சேவை தரம் 2 – 1 இல் கடமையாற்றியோர் புதிய அதிபர் சேவை தரம் – 2 ற்கு உள்வாங்கப்பட்ட போது இவர்களுக்கான சம்பளத்தை வழங்குவதற்கு சம்பள நிலை இல்லாதிருந்தது.

இதனையடுத்து புதிய அதிபர் சேவை பிரமாணக் குறிப்பிற்கு திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றுக்கு 01.07.2008 முதல் பதவி உயர்த்தப்பட்டு சம்பளத்தை மாத்திரம் பெறுவதற்கு தகுதி உடையவர்களாக கல்வி அமைச்சினால் கணிக்கப்பட்டனர். எனினும் இவர்களுக்கான சம்பளம் 01.01.2011 முதல் நிலுவையுடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றுக்கு பதவி உயர்த்தப்பட்டமைக்கான கடிதம் அமைச்சினால் பின்னர் அனுப்பி வைக்கப்படும் எனவும் கடிதம் ஒன்று வழங்கப்பட்டதாகக் கருதி சம்பள மாற்றங்களைச் செய்யுமாறும் அதன் அடிப்படையில் ஓய்வூதியங்களை மறு சீரமைப்பு செய்யுமாறும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் இதுவரை பதவி உயர்வு கடிதங்களை கல்வி அமைச்சு சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கவில்லை.

இதனையடுத்து சேவையிலிருந்து ஓய்வு பெற்ற சிலர் அண்மையில் கல்வி அமைச்சு அதிகாரிகளைச் சந்தித்து தமது பதவி உயர்வு கடிதங்களை கோரிய போது சிங்கள மொழியில் 100 மணித்தியாலங்கள் தேர்ச்சிபெற்ற சான்றிதழ்களை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளனர்

Related posts: