தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி குறித்த முக்கிய அறிவிப்பு!

Saturday, January 15th, 2022

2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

2 ஆயிரத்து 438 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: