தரம் ஐந்து பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களுக்கான அறிவித்தல்!
Wednesday, November 8th, 2017
2017ஆம் அண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஊழியர் நம்பிக்கை நிதியத்தினுடாக(ETF) விசேட புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளவர்களின் பிள்ளைகளுக்காக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களுக்கு தமது அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த்குமார் கோரியுள்ளார்.
பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பெற்றாரும் இதற்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
Related posts:
வாகன நெரிசலை எதிர்கொள்ள இலகு ரயில் சேவை!
நீர்க்கட்டண யோசனைக்கு அமைச்சரவை எதிர்ப்பு!
அதிகரித்துச் செல்லும் முட்டையின் விலை !
|
|