தமிழ் இளைஞர்களை பலவந்தமாக போராளிகளாக்கியவர்கள் இன்று மனித உரிமைகள் குறித்து பேசுகின்றனர் – அமைச்சர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, March 2nd, 2021

அப்பாவித் தமிழ் இளைஞர்களை பலவந்தமான முறையில் புலிகள் அமைப்பில் போராளிகளாக்கியவர்கள், இன்று சர்வதேச அரங்கில், மனித உரிமைகள் பேரவை குறித்து வாதிடுகிறார்கள் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இதன்போது தொடர்ந்தும்  கருத்து வெளியிட்ட அவர் –

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரது அறிக்கை, இலங்கையின் சுயாதீனத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டது. ஆகையால், அந்த அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துவிட்டது.

இறுதிக்கட்ட யுத்தத்தில், மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குத் தேவையான சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை.

எனினும், 2019 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆணையாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஜெனீவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் கையாண்டு, அதில் வெற்றி கொள்ளும் என தெரிவித்திருந்த அமைச்சர் பீரிஸ் அப்பாவித் தமிழ் இளைஞர்களை பலவந்தமான முறையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக்கியவர்கள், இன்று சர்வதேச அரங்கில், மனித உரிமைகள் பேரவை குறித்து வாதிடுகிறார்கள்” எனவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: