தமிழ் அரசியல் தலைமைகளுக்கிடையில் ஒற்றுமை உருவாகுமானால் அதில் ஈ.பி.டி.பி முதன்மைக் கட்சியாக செயற்படும் – தோழர் ஸ்ராலின்!

Tuesday, July 28th, 2020

தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தமிழ் அரசியல் தலைமைகளுக்கிடையில்  ஒற்றுமை  உருவாக்கப்படுமானால் அந்த ஒன்றுபட்ட செயற்றிட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முதன்மைக் கட்சியாக செயற்படும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் திருமலை மாவட்ட தலைமை வேட்பாளரும் கட்சியின் ஊடகச் செயலாளருமான எம்.ஐ. ஸ்ராலின் தெரிவித்தா ர்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு

கோரும் நோக்கில் சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

ஈ.பி.டி.பி. கட்சி, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தனியாக வீணை சின்னத்தில் போட்டியிடுகின்ற நிலையில், திருமலை மாவட்ட தமிழ் மக்கள் மத்தியில், தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக களம் இறங்கியிருக்க வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் இருக்கின்ற நிலையிலேயே, குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை என்பது மக்கள் நலன் சார்ந்து இருக்க வேண்டுமே தவிர, தேர்தல் வெற்றியை மாத்திரம்  இலக்காக கொண்டதாக இருக்கக் கூடாது என்பதில் ஈ.பி.டி.பி. தெளிவாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

மேலும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருமலை மக்கள் வீணைக்கு வாக்களிப்பது என்பது, திருமலையில் அவர்கள் கலாச்சார விழுமியங்களை பாதுகாத்து தங்களுடைய அடையாளத்தையும் இருப்பையும் பாதுகாப்பதற்கான திறவுகோல் எனத் தெரிவித்தார்.

அத்துடன், திருமலை மக்களுக்கு அங்கலாய்ப்பாக இருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்தி போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வை பெறுவதற்கான பொறிமுறை ஈ.பி.டி.பி. கட்சியிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, திருகோணமலை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த தோழர் ஸ்ராலின், யாழ்ப்பாணத்தில் கிடைத்த ஆசனங்களில் ஒன்றை திருகோணமலைக்கு நகர்த்தி  தமிழர்களின் கலாச்சார தலைநகரில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்த வரலாற்றை கொண்டது ஈ.பி.டி.பி. என்பதை சுட்டிக்காட்டிமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: