தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவு செய்யுங்கள் – வடக்கு மாகாணசபையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் தவநாதன் வலியுறுத்து!

Thavanathan Friday, October 6th, 2017

தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களது பாதுகாப்பையும் விடுதலை தொடர்பாகவும் விரைவான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகணசபை உறுப்பினர் வை. தவநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் 107 ஆவது அமர்வு இன்றையதினம் (06) அவைத் தலைவர் சிவஞானம் தலைமையில் கூடியது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் சமுகமளிக்காதிருந்த நிலையில் விஷேட பிரேரணையாக தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் அவையில் முன்வைக்கப்பட்டது.

இதில் உரையாற்றுகையிலேயே தவநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த பிரேரணை ஏகோபித்தவகையில் நிறைவேற்றப்பட்டு கைதிகளின் நிலைமை தொடர்பாகவும் அவர்களது விடுதலை தொடர்பாகவும் ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமது விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியாக தமிழ் அரசியல் கைதிகள் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ள நிலையிலேயே தவநாதனால் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.


சுட்டெரிக்கும் எல் நீனோவைத் தொடர்ந்து மூழ்கடிக்க வருகிறது லா நீனா!
புதிய VAT திருத்தத்தின் ஊடாக தனியார் சுகாதார சேவைகளுக்கு நிவாரணம்!
வடக்கிற்கு வரும் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை -வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதி !
கச்சதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தின் திறப்பு விழா இடம்பெற்றது!
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழா இன்று: அலையென திரண்ட பக்தர்கள்!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!