தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இருந்தே யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்கள் ஆரம்பமாகின- ஈ.பி.டியின் நாடாளுமன்ற வேட்பாளர் றெமிடியஸ்!

Sunday, July 5th, 2020

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதாக யாழ் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளருமான றெமிடியஸ் தெரிவித்துள்ளார்

கோண்டாவில் பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்கள் சந்திப்பு ஒன்றில் நேற்று கலந்து கொண்டார். ஈழ வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் செந்தூரனின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் – யாழ் மாவட்டத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் ஆரம்பமாகவும் அதற்கு மூலகாரணமாக இருந்ததும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகமே.

ஏனெனில் யாழ் மாவட்டத்தில் முதலாவதாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேகநபர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் அலுவலகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டிரந்தனர். இதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

Related posts: