தமது பூர்வீக நிலத்தை மீளவும் தமக்கு பெற்றுத்தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து

Tuesday, May 30th, 2017

பூநகரி இரணைதீவு மக்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி புனித திரேசம்மாள் ஆலய முன்றலிலிருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி மாவட்டச் செயலகத்தை சென்றடைந்ததுடன் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனுவொன்றையும் கையளித்துள்ளனர்.

இரணைதீவு மக்கள் தங்களின் பூர்வீக நிலத்திற்கு செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டத்தைஇம்மாதம் முதலாம் திகதிமுதல் இரணைமாதாநகரில்; தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்று 29 வது நாளை எட்டியுள்ளது.

ஆனாலும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படாத நிலையிலேயே இக்கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நேற்றைய போராட்டத்தின் போது எமது பூர்வீக நிலம் எமக்கு வேண்டும். இரணைதீவில்

நிரந்தரமாக குடியமர்ந்து தொழில் செய்யும் உரிமை வேண்டும். எமது காணிகள்ரூபவ் கால்நடைகளை பராமரிக்க வேண்டும். வாழ்வாதாரத்தை மேம்படுத்த மிகச் சிறந்த இவ்விடம் வேண்டும். எமது தீவு எம்மை விட்டுப் பறிபோகும் அபாயத்திலிருந்து காப்பற்றப்பட வேண்டும். தீவின் வளங்கள் அந்நியர்களால் சூறையாடப்படும் நிலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தீவை அக்கிரமித்துள்ள கடற்படை முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: