தமக்கான குடிநீரை பெற்றுத்தருமாறு நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம் பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை
Saturday, May 14th, 2016தமது சுற்றாடலில் குடிநீர் தேவைக்கான நன்நீரை பெறமுடியாத நிலையில் தமது பகுதிக்கான குடிநீர் விநியோகத்தை உடனடியாக மேற்கொண்டு உதவுமாறு நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம் பகுதி மக்கள்பாராளுமன்ற உறுப்பனர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமது அன்றாடத் தேவைக்கான குடிநீரை தமது வதிவிடச் சூழலில் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இதற்காக நீண்ட தூரம் சென்றும் தேவையான நீரை பெறமுடியாதிருப்பதாக ஜேம்ஸ்புரம் சனசமுகநிலையத்தின் தலைவர் தெரிவித்தார்.
இந்நீருக்கென இங்குள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாதாந்தம் 60ரூபா பணம்செலுத்தி வேறிடத்திலிருந்து கொள்கலன்கள் மூலம் நீரைப்பெற பூனகரி பிரதேச சபை மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடந்த வருடத்தில் விநியோகங்கள் இடமபெற்ற போதும் தேவையான நீரை அப்போதும் பெற்றுக்கொள்வதில் தடங்கல்களை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
நாச்சிக்குடாவின் ஏனைய பகுதிகளுக்கு இப்போது நீர் விநியோகம் நடைபெறுகின்ற போதும் ஜேம்ஸ்ரத்துக்கான விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டு நான்கு மதங்கள் கடந்துவிட்டதாக மற்றொரு பிரதேசவாசி தெரிவித்தார்.
சம்;பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்நீர்ப்பற்றாக்குறையை நிவர்த்திக்க முறையிட்டு பலனேதும் கிடைக்காத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு இவ்விடயம் கொண்டுவரப்பட்டதையடுத்து பிரதேசசபை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இப்பகுதிக்கான நீர்விநியோகத்துக்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Related posts:
|
|