தபால் மூல மருந்து விநியோகம் இன்றுமுதல் நிறுத்தம் – பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க அறிவிப்பு!

Wednesday, March 10th, 2021

வைத்தியசாலைகளில் மாதாந்தம் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் ஊடாக வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்றுமுதல் நிறுத்தப்படுவதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்பதாக கொரோனா தொற்று காரணமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் கீழ், இதுவரை 17 இலட்சம் மருந்துப் பொதிகள் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள  பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க இதற்காக 170 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தபால் நிலையங்களின் செயற்பாடுகள் வழமைக்கு கொண்டு வரப்படவுள்ளதால் மருந்துப் பொதிகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக பிரதி தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையின் பேரில் தபால் ஊடான மருந்து விநியோகம் நிறுத்தப்படுவதாகவும் தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: