தபால் சேவை முடக்கம்: பரீட்சைக் கட்டணங்களை பிரதேச மாவட்ட செயலகங்கள் ஊடாக செலுத்த நடவடிக்கை!

Friday, June 15th, 2018

தபால் திணைக்களத்தின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக தடைப்பட்டுள் அனைத்து பரீட்சைகளுக்குமான கட்டணங்களை  பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் ஊடாக செலுத்துவற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகளுக்கான அனுமதிப்பத்திரம் கிடைக்காத பரீட்சார்த்திகளுக்கு புதிய நடைமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் குறிப்பிட்டார்.

குறித்த போராட்டம் காணரமாக தபால் மத்திய நிலையத்தில் 13 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தேங்கியுள்ளன.அத்துடன் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகக் கடிதங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கியுள்ளதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தபால் நிலையப் பொறுப்பதிகாரிகளின் சேவையை நிரந்தர சேவையாக உள்வாங்காமை உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: