தனியார் ஊழியர்களுக்கு வழமை போன்று சம்பளத்தை வழங்க வேண்டும் – தொழிலாளர் ஆணையாளர் நாயகம்!

Wednesday, July 29th, 2020

கொரோனா காலத்தில் பணிக்கு வருபவர்களுக்கும் வீட்டில் இருந்து பணியாற்றும் தனியார் பிரிவு ஊழியர்களுக்கும் வழமையை போன்று அவர்களுக்கு சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீரவனிவால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைக்கமைய  தனியார்துறை ஊழியர்களுக்கு 14500 ரூபாய் என்ற குறைந்தபட்ச சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படாதென அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செப்டெம்பர் மாதம் வரை எந்தவொரு பணிகளிலும் ஈடுபடாமல் வீடுகளில் தங்கியிருக்கும் ஊழியர்களுக்கு மாத்திரமே 14500 ரூபாய் சம்பளம் வழங்கப்படவுள்ளதாக ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

Related posts: